சென்னை நகரில், வீட்டருகே இடம் இல்லாதவர்கள், மாடியில் செடிகளை வளர்த்து பயன் பெறலாம். ஒன்றரை அடி உயரம், இரண்டடி அகலத்தில் செங்கல் அடுக்கி தரையில் பாலித்தீன் கவர் விரித்து, மண் போட்டு சில செடி, கொடிகள் வளர்த்து பயன் பெறலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது. இதற்கான ஆலோசனையும், செடி, கொடிகளையும் வனத்துறையிடம் இலவசமாக பெறலாம்.
வன அலுவலர்கள் உங்கள் வீட்டை ஆய்வு செய்து, குறிப்பிட்ட இடத்தில் எந்த வகை செடிகள் நடலாம் என்பதை விளக்கி, பிடித்த செடி வகைகளை நட்டு, வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்குவர். சென்னையில், வேளச்சேரி, அண்ணா நகர் மற்றும் புறநகர் பகுதியான பெருங்களத்தூர், படப்பை போன்ற இடங்களில் வனத்துறை மூலம் செடி, கொடிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் மாடித் தோட்டம் அமைக்க விரும்புவோர் நகர்ப்புற வனவியல் அலுவலரை 94454-68081, 99623-92554 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment