Friday, April 6, 2012

காதல்

பெற்றவரை மறக்கும் காதல்
பெரியவரை மிதிக்கும் காதல்
கற்று வந்த கல்விதன்னை
கணப்பொழுதில் இழக்கும் காதல்

பைத்தியமாய் ஆக்கும் காதல்
பக்குவத்தை இழக்கும் காதல்
வைத்தியமே செய்ய இயலா
வருத்தம்தான் இந்தக் காதல்

தன்னையே மறக்கும்காதல்
தவறுக்குத் தூண்டும் காதல்
உன்னையே அழிக்கும் காதல்
உயிரையே உருக்கும் காதல்

பொய் சொல்ல வைக்கும் காதல்
போதையை ஊட்டும் காதல்
வெயிலையே நிலவாய் மாற்றி
வேடிக்கை காட்டும் காதல

உறக்கத்தைப் பறிக்கும் காதல்
உள்ளத்தைக் கசக்கும் காதல்
உலகத்தைத் தனக்குள் வைத்து
ஊஞ்சலாய் ஆட்டும் காதல்

கலகத்தை உண்டு பண்ணும்
கண்ணீரில் குளிக்க வைக்கும்
கற்பனைக் கவிஞனாக்கும்
காலனைத் துணைக்கழைக்கும்

வாழ்வையே முடித்து வைக்கும்
வைரத்தை மனதிற் கொடுக்கும்
ஏழையாய் இருந்தபோதும்
எண்ணத்தில் அரசனாக்கும்.

-யாரோ -

ரொம்ப ஒழுக்கமான பொண்ணு

சிவா : அந்த பொண்ணு ரொம்ப ஒழுக்கமான பொண்ணு

ராஜா : எப்படி சொல்றே????

சிவா : நேத்து அவ வீட்டு குக்கர் விசில் அடிச்சதும் குக்கரை செருப்பால அடிச்சிட்டா!

நடத்துனர் சிவா

நடத்துனர்: டிக்கட் எடு

சிவா: முன்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: யாரும் எடுக்கலை

சிவா: அப்போ பின்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: பின்னாடியும் யாரும் எடுக்கலை

சிவா : அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா?

கம்பெனி டாக்டர்

டாக்டர்: நீங்க என்ன சோப் பயன்படுத்தறீங்க?

சிவா : கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் ப்ரஷ்

டாக்டர்: கோபால் கம்பெனி ஒரு இண்டர்நேஷனல் கம்பெனியா?

சிவா : இல்ல டாக்டர் கோபால் என்னோட ரூம்மேட்

ஆசிரியர்

ஆசிரியர்: உலகத்தை முதன் முதலில் சுற்றி வந்தது யாரு?


சிவசக்தி : விடுங்க சார், ஊர் சுத்துற பயல பத்தி நமக்கு என்ன பேச்சு