Friday, April 6, 2012

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி
பசியாறிய பின்னும்
பறித்த பூக்களில்
மிச்சமிருக்கிறதுதேன்!

குருவிகள்
கொத்தித் தின்ன பிறகும்
அப்படியே இருக்கிறது
முற்றத்தில் காய வைத்த நெல்!

அணில் கடித்த பிறகும் கூட
குறையாமலேயே இருக்கிறது
கனியும், சுவையும்!

பசு மேய்ந்த பிறகும்
நிலம் மறைக்க
எஞ்சியிருக்கிறது பசும்புல்!

புலிகளும், மான்களும்
எண்ணிக்கையில்
எப்போதும்
சமன் செய்து கொள்கின்றன
பற்றாக்குறை
நிகழ்ந்து விடாமல்!

தான் உண்டது போக,
மீதியைக்
கட்டியெடுத்து போகும்
சுயநலம்,
ஐந்தறிவு உயிர்கள்
எவற்றிற்கும் இல்லை…
தன்னை ஆறறிவாய்
பிதற்றிக் கொண்டு திரியும்
மனிதனைத் தவிர!


No comments:

Post a Comment