Tuesday, April 3, 2012

கழுதைப் புலி

கழுதைப் புலி ஒரு வேடிக்கையான விலங்கு. இறந்து போன விலங்குகளின் இறைச்சியைத்தான் இது விரும்பித் தின்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள࠯?. உண்மையில் கழுதைப் புலிகள் 95 சதவீதம் தனது இரையைத் தானே வேட்டையாடி வயிற்றை நிரப்பிக் கொள்கிறது. பெரும்பாலும் இது இரவு நேரத்தில்தான் வேட்டைக்குச் செல்லும். பெரிய விலங்குகளை அடித்துச் சாப்பிடவேண்டும் என்றால் தனது கூட்டத்தினரோடு செல்லும். மான்,வரிக்குதிரை, காட்டெருமை ஆகியவை இதன் விருப்பமான இரைகளாகும்.

உடல் முழுக்க பெரும் திட்டுக்களைக் கொண்ட கழுதைப் புலியும் உண்டு. இவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. காடுகளில் வாழும்போது இவை 40 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் மிருககாட்சி சாலைகளில் வளர்த்தால் 20 வருடங்கள் வரையே வாழும். கழுதை என்ற பெயருடன் இருப்பதால் இது கழுதையின் உறவு இனமும் அல்ல. புலி என்ற பெயர் இருப்பதால் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் கிடையாது. இது எலி பாரம்பரியத்தைச் சேர்ந்தது.

No comments:

Post a Comment