Friday, March 23, 2012

நான்கு மறைகள்


நான்கு மறைகள்
தங்களுக்கு இல்லையாயினும்
நடைபோடும்
ஆனந்தமாய்
நாள்தோறும் நதிகள்…

ஐந்து கடமைகள்
தங்களுக்கு இல்லையாயினும்
நின்ற இடத்திலேயே என்றாலும்
நிம்மதியாய் மரங்கள்…

பத்துக்கட்டளைகள்
தங்களுக்கு இல்லையாயினும்

ஆனந்தமாய் பறக்கும்
அத்துணை பறவைகளும்…

தங்களுக்குத்தானே
இவைகள்
ஆக்கிக் கொண்டதால்தான்
தடுமாறுகிறார்களோ
மனிதர்கள்…?

No comments:

Post a Comment